அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-02-11 18:11 GMT
கரூர்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும். சாலைபணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-வது நாளான நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்