அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-02-11 16:51 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் அரசு ஊழியர்கள் 9 நாட்களாக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து 10-ம் நாளான நேற்று நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்