அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே எருது விடும் திருவிழா நடந்தது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வேலங்காடு கிராமத்தில் 54-ம் ஆண்டு எருது விடும் விழா இன்று நடந்தது.
வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் பழனி மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, வேலூர், பரதராமி, பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் இருந்து 250 காளைகள் பங்ேகற்றன. காளைகளை கால்நடை டாக்டர் பரிசோதனை செய்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் ஓடும் பாதையில் பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதியது.
காளைகள் முட்டி 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்ேகயே ஒடுகத்தூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், வினோத் மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு ரூ.60 ஆயிரம் முதல் 45 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர், எருதுவிடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.