மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் டி.ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். ரங்கன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை இடைநிலை கமிட்டி உறுப்பினர் சி.கேசவன் தொடங்கி வைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சியில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் வருவதில்லை. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யாமலேேய கட்டாய குடிநீர் வசூல் செய்கிறது. 10 மற்றும் 12-வது வார்டில் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் பழுதாகியதை இன்னும் சரி செய்யவில்லை. இதுபற்றி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திருப்பத்தூர் நகராட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஆணையரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கோஷம் எழுப்பினர். பிறப்பு, இறப்பு சான்று கேட்டு மனு கொடுத்த விண்ணப்பங்களை முறையாக விசாரிக்காமல் காலம் கடத்தும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க பல மாதங்கள் அவதாக குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.