மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து நாசம்
ஆற்காடு அருகே மின்கசிவினால் குடிசை வீடு எரிந்து நாசமானது.;
ஆற்காடு
ஆற்காடு அருகே மின்கசிவினால் குடிசை வீடு எரிந்து நாசமானது.
ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடியை அடுத்த கே.வேளூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மணிவண்ணன் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு பார்த்தசாரதியின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
இதனை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை பீ்ய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து புத்தகங்கள், பீரோ மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி, எரிந்த வீட்டை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியை வழங்கினார்.