சாயர்புரம் அருகே ரேஷன் கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ரேஷன் கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சாயர்புரம்:
ரேஷன் கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்
ஏரல் அருகே பண்டாரவிளையைச் சேர்ந்தவர் மார்க்ரெட் (வயது 36). இவர் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி ெசன்று கொண்டிருந்தார்.
4½ பவுன் சங்கிலி பறிப்பு
சாயர்புரம் அருகே நட்டாத்தி-கொம்புகாரன் பொட்டல் இடையே சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று மார்க்ரெட் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் கடை பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.