தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளிக்கு பூட்டு

கணியம்பாடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளிக்கு ெபற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பூட்டு போட்டனர்.;

Update:2021-02-11 18:49 IST
அடுக்கம்பாறை

கணியம்பாடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளிக்கு ெபற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பூட்டு போட்டனர். 

நூலக கட்டிடம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

 பள்ளியின் உட்பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதால், கட்டுமான பணிக்கு வரும் வேலையாட்கள் காலை 6 மணிக்கு வந்து, மாலை 6 மணிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் கட்டிடத்தை கட்டி வரும் ஒப்பந்ததாரர் பள்ளி திறக்கும் நேரத்தில் மட்டும் உள்ளே வர வேண்டும் என தலைமையாசிரியை கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் தலைமை ஆசிரியை ஷர்மிளா சிவரஞ்சனிக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கும் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியையை பணியிட மாறுதல் செய்யக்கோரி கலெக்டர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

பூட்டு போட்டனர்

 இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றுவிடுவதால், நூலக கட்டிட கட்டுமான பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் முறையிட்டுள்ளனர். 

தலைமை ஆசிரியை செயல்பாடுகளைக் கண்டித்தும், அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை மற்றும் சிலர் இன்று பள்ளியின் நுழைவாயிலுக்கு பூட்டு போட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். 
இதனால் மாணவ-மாணவிகள் உள்ளே செல்ல முடியாமல் வெளியில் காத்திருந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, அவர்களிடம் சமரசம் செய்து, பள்ளியின் வாயிற்கதவை திறந்து விட்டனர். இதையடுத்து மாணவர்கள் உள்ளே சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விவி அலுவலர் குணசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 
---

மேலும் செய்திகள்