திருவாரூர் கமலாலய குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

தை அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Update: 2021-02-11 13:00 GMT
திருவாரூர்:-
தை அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
தை அமாவாசை
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை (மகாளய அமாவாசை), தை அமாவாசை ஆகிய நாட்களில் ஆறு, குளங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கி தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி அவர்களுடைய தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கமலாலய குளம்

அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி பல்வேறு இடங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிறக்க முக்தி தரும் தலமாக கருதப்படும் திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்று கமலாலய குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் உள்ள படித்துறையில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் திருவாரூர் அருகே உள்ள குருவி ராமேஸ்வரத்திலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்