செங்கல்பட்டு, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-02-11 03:15 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் 77 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எல்.ஐ.சி பங்குகளை தனியார் மையமாக்குவதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நகர தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில எஸ்.சி. எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் அய்யப்பன், எஸ்.சி. எஸ். டி. பிரிவு காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கநாதன் நாயுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் பெரியார் தூண் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் அளவூர் நாகராஜன் தலைமையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்