உத்திரமேரூரில் குட்டையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
உத்திரமேரூரில் குட்டையில் தவறி விழுந்த தொழிலாளி மூழ்கி பலியானார்.
உத்திரமேரூர்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது 39). இவர் உத்திரமேரூர் ஒன்றியம் அமராவதி பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்த பின்பு அவர் தன்னுடன் பணிபுரிந்த சிவசங்கரன், சவுத்ரி, அப்துல்லா, அகில் குமார், உமேஷ் பார்த்தி ஆகியோருடன் நிறுவனத்தின் பின்புறமுள்ள குட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
குட்டையில் தவறி விழுந்த உமாகாந்த் நீச்சல் தெரியாத தால் அதில் மூழ்கி பலியானார். உடன் சென்றவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.
இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாகாந்த் உடலை தேடி வெளியே எடுத்தனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.