சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்

சேலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-10 22:35 GMT
சேலம்:
சேலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலைமறியல்
40 சதவீத உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனபன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி வருகிறது. 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடத்தினர்.
28 பேர் கைது
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அம்மாசி தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்