ஆத்தூர் அருகே சரக்கு வேனில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆத்தூர் அருகே சரக்கு வேனில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே சரக்கு வேனில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள்
பெங்களூருவில் இருந்து சரக்கு வேன் மூலம் ஆத்தூர் வழியாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் தனிப்படை போலீசார் செல்லியம்பாளையம் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 45 மூட்டைகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
டிரைவர் கைது
இதை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து வேன் டிரைவர் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38) என்பவரை கைது செய்தனர்.