சேலத்தில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சேலத்தில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-10 21:38 GMT
சேலம்:
சேலத்தில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சில்மிஷம்
சேலம் அன்னதானப்பட்டியை அடுத்த மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர், வீட்டிலேயே சிறிய அளவிலான டிபன் கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அவரது ஓட்டலுக்கு டிபன் வாங்க வந்தாள். அப்போது, அந்த சிறுமியிடம் நைசாக பேசிய கோவிந்தராஜ், வீட்டிற்குள் அழைத்து சென்று கையை பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்றுவிட்டாள். பின்னர் அங்கு நடந்ததை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்து அழுதாள்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கோவிந்தராஜிடம் இது குறித்து விசாரிக்க வந்தனர். ஆனால் பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்