பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புதுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 40). இ்ந்தநிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 6-ந் தேதி சுலோச்சனா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சுலோச்சனாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.