சாலை மறியல் செய்த அரசு ஊழியர்கள் 30 பேர் கைது

சாலை மறியல் செய்த அரசு ஊழியர்கள் 30 பேர் கைது

Update: 2021-02-10 21:13 GMT
திருச்சி,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது 30 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்