அரசு ஊழியர்கள் சாலை மறியல்;2 பேர் மயங்கி விழுந்தனர்

மயிலாடுதுறையில் 9-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அபபோது 2 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-10 21:02 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் 9-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அபபோது 2 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 9-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
மயங்கி விழுந்தார் 
தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்அப்போது அரசு ஊழியர் சங்கத்தினர் சிலர் கைதாக மறுத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வந்து வேனில் ஏற்ற முயற்சித்தபோது, மாவட்ட தலைவர் இளவரசன் மயங்கி விழுந்தார். இதனைடுத்து மயங்கி விழுந்த இளவரசனை போலீசார் வேனில் ஏற்றிச்சென்று அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதேபோல போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவரும் மயங்கி விழுந்தார். உடனே அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது, உடனே அவர் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு திரும்பினார்.
போக்குவரத்து பாதிப்பு 
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இணை செயலாளர் கலா, அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் சாலை பணியாளர் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம் என அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மேலும் செய்திகள்