மாவட்ட பதிவாளர் தணிக்கை அலுவலகத்திற்கு கேடயம்
மாவட்ட பதிவாளர் தணிக்கை அலுவலகத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது.;
திருச்சி,
தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் மாவட்ட நிலை அரசு அலுவலகங்களை தமிழக அரசு கண்டறிந்து அவ்வலுவலகத்தினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் கேடயம் வழங்கி பாராட்டி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மாவட்டப்பதிவாளர் தணிக்கை அலுவலகம் ஆட்சிமொழி செயல்பாட்டில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்தஅலுவலகத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கேடயம் வழங்கி பாராட்டினார்.