திருச்சி விமான நிலையத்தில் நவீன மயமாக்கப்படும் சிற்றுண்டி உணவகம்

திருச்சி விமான நிலையத்தில் சிற்றுண்டி உணவகம் நவீன மயமாக்கப்படுகிறது

Update: 2021-02-10 20:47 GMT
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் சுமார் 2 மாத காலமாக உள் நுழைவு வாயிலில் இயங்கிவந்த சிற்றுண்டி உணவகம் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வருபவர்களும், அழைத்துச்செல்ல வருபவர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது விமான நிலையத்தின் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் சிற்றுண்டி உணவகத்தை நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து குளிர்சாதன வசதியுடன், ரூ.4 லட்சம் செலவில் இந்த சிற்றுண்டி உணவகம் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், உணவின்றி தடுமாறும், பயணிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்