ஸ்ரீரங்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ந்து சாவு; ஆர்.டி.ஓ. விசாரணை
ஸ்ரீரங்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம்,
திருவானைக்காவல் நரியன் தெரு பகுதியில் வசிப்பவர் சிக்கந்தர் பாஷா. இவர் தனலட்சுமி (வயது 20) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு மின்விளக்கு போடும் போது மின்சாரம் பாய்ந்து தனலட்சுமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை செய்யப்பட்டு வருகிறது.