நெல்லை, தென்காசியில் மேலும் 18 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-02-10 20:38 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை யூனியன், மானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்த 646 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 379 ஆக அதிகரித்தது. தற்போது 63 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 464 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 2்73 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 32 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் இதுவரையிலும் 159 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்