பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரித்திகைவாசன் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசார் பிடியில் சிக்காமல் கடந்த செப்டம்பர் மாதம் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பிரித்திகைவாசனை பிடிக்க பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த பிரித்திகைவாசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
--