எட்டெழுத்து பெருமாள் கோவிலில் வருசாபிஷேகம்
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை, சிறப்பு பூஜை, காலை 6 மணிக்கு கோவில் விமானத்திலும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆதிசிவன், எட்டெழுத்து பெருமாள், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்பசாமி, ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.