எந்திரத்தில் சிக்கி விவசாயி பலி

எந்திரத்தில் சிக்கி விவசாயி பலி;

Update: 2021-02-10 20:15 GMT
விருதுநகர்,
சிவகாசி அருகே உள்ள வெற்றிலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (வயது55). விவசாயி. இவர் விருதுநகர் வச்சக்காரபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் எந்திரம் மூலம் செடி, கொடிகளை வெட்டி கொண்டிருந்தார். எந்திரம் பழுதானதால் அதனை சரிசெய்ய சுப்பையா முயன்றபோது எந்திரம் தானாக இயங்கியதில் சுப்பையாவின் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்