விருதுநகர்,
சாத்தூர் நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 48). இவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம் புதூர் விலக்குஅருகே குடிபோதையில் சாலையில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் ஆனந்த் (வயது22) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.