பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் மணவாளம் அம்பேத்கர்புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி (வயது 23), அதே ஊரை சேர்ந்த சேகர் மனைவி பூங்கொடி என்ற முனியம்மாள் (50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.