ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-10 19:02 GMT
கரூர்
தமிழக முதல்-அமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக 3-வது நாளாக நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இருதயசாமி, செல்வராஜ், மலைக்கொழுந்தன், சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


மேலும் செய்திகள்