ஓய்வூதியர் பென்சனர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் பென்சனர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-10 18:56 GMT
கரூர்
போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றவர்களுக்கு ஆண்டு கணக்கில் ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்காததையும், பஞ்சப்படி உயர்வு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காததையும், 2010-ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தப்படி ஒப்பந்த பலன்கள் 2003-க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதிய திட்டம், மருத்துவ திட்டம் நடைமுறைப்படுத்திடவும், ஓய்வூதிய பொறுப்பாட்சிக்குழுவை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தியும் நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் சகாதேவன், நாகலெட்சுமி, மணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்