கடலூரில் அரசு ஊழியர்கள் மறியல்- 50 போ் கைது

கடலூரில் 9வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-02-10 18:47 GMT
கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டம் நேற்று 9-வது நாளாக நடந்தது.

கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் சாலைக்கு திரண்டு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 44 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்