மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

பாணாவரம், மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியானார்;

Update: 2021-02-10 18:23 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 60). இவரது மனைவி லலிதா (59).  இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் மாலைமேடு நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென காத்தவராயன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காத்தவராயன், லலிதா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவா் படுகாயம் அடைந்தனர். 

இதில் காத்தவராயன் பரிதாபமாக உயிரிழந்தார். லலிதாவும், மோட்டார் சைக்கிளில் வந்தவரும் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்