சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2021-02-10 18:03 GMT
காரைக்குடி,

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடியை அடுத்த எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் எஸ்.ஆர்.பட்டிணம்-கல்லுப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 30 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் மற்றும் மேலூர் நொண்டிகோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி வண்டியும், 2-வது பரிசை அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா வண்டியும், 3-வது பரிசை எஸ்.ஆர்.பட்டிணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வில்லவன் வண்டியும், 4-வது பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும் பெற்றன.

பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

 பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு 6 இடங்களை பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும், 4-வது பரிசை ஆட்டுக்குளம் வசந்தா வண்டியும், 5-வது பரிசை கொன்னப்பட்டி காமராஜ் வண்டியும், 6-வது பரிசை சிங்கம்புணரி பழனிச்சாமி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற அனைத்து வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயத்தின் போது சீறிப்பாய்ந்த வண்டிகளை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்