ஆயுர்வேதம் படித்த டாக்டர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டாக்டர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் டாக்டர்கள் தேவகுமார், ஜோதி, நடேசன், கணேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.