கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பல் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பல் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
கள்ளக்குறிச்சி,
ஆயுர்வேத மருத்துவர்களும் பல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கும் மத்திய அரசின் கலப்பு மருத்துவ சிகிக்சைக்கான அரசானணயை திரும்ப பெறக்கோரி இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் செல்வக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் அருண்குமார், துணைத் தலைவர்கள் சுரேந்தர், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் விஸ்வநாதன் வரவேற்றார்.
காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் சாலிய தந்திரம் என்ற பெயரில் பாரம்பரிய மருத்துவர்கள் நவீன சிகிச்சை அளிப்பதால் மருத்துவ சிகிச்சைகளின் தரம் கேள்விக்குறியாக மாறிவிடும். மேலும் நவீன மருத்துவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். கலப்பு மருத்துவ அரசாணையை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். பல் டாக்டர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 400 பல் டாக்டர்களின் தற்காலிக பணியை நிரந்தரமாக்க வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பல் மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் மருத்துவ பணியாளர் ஆணைய தேர்வினை உடனே நடத்தி பல் மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்தி, மக்களுக்கு பல் மருத்துவ சேவை தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. .இதில் மருத்துவர்கள் ரேகா, வெங்கடேசன், அபுதாகீர், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.