கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது

கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-02-10 16:10 GMT
கம்பம்:
கம்பம் புறவழிச்சாலை வழியாக கேரளாவுக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அவரது உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் கம்பம் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 28 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து அந்த கஞ்சாவையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த வைரமுத்து (வயது 31) என்பதும், கஞ்சாவை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வைரமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்