பல் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-10 15:01 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு பதிய கலப்பு சிகிச்சை முறையில் அனைத்து ஆயுர்வேத மருத்துவர்களும், அலோபதி அறுவை சிகிச்சை மருத்துவங்களை மேற்கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளதை கண்டித்தும் உடனடியாக அதனை வாபஸ்பெறக்கோரியும், பல் மருத்துவமனை தரப்பரிசோதனை மேற்பார்வை குழுவில் பல்டாக்டர்களையும் இடம்பெறச்செய்ய வேண்டும், மருத்துவ கழிவு மேலாண்மை நிறுவனங்களை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் பல் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ரம்மீஷ் ராம்நாத் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் இமானுவேல்ராஜா சிங், பொருளாளர் டாக்டர் பாஸ்கர பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர் டாக்டர் அன்பரசன் இளங்கோவன், துணை தலைவர்கள் டாக்டர்கள் ஈஸ்வரபிரசாத், அருண்குமார், இணை செயலாளர் டாக்டர் லெனின், டாக்டர்கள் நிறைமதி, செல்வமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் ராமநாதபுரம் கலெக்டர் (பொறுப்பு) மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்