கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-02-10 13:46 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி:கோவில்பட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
புதுவணிகம் ஐ.பி.்பி.பி. உள்ளிட்ட மிரட்டல் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். பணி ஓய்வு பலன்களை ஜி.டி.எஸ். ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். அந்த ஊழியர்கள் விடுப்பு வேண்டினால் தடையின்றி விடுப்பு வழங்க வேண்டும். ஐ.பி.பி.பி. மொபைல்களில் பழுது ஏற்பட்டால் ஊழியர்களை பணம் கட்ட நிர்ப்பந்தம் செய்வதை நிறுத்த வேண்டும். பணியிட மாறுதல் கிடைக்க பெற்றவர்களை புதிய பணியிடத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர்கள் பி.நெல்லையப்பன், வி.கணேசமூர்த்தி மற்றும் ஜி.கருத்தப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். தென் மண்டல செயலாளர் என்.ராமசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஐ.ஞானபாலசிங் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர்கள் பூராஜா, பிச்சையா ராஜாமணி, பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்