ஊத்துக்கோட்டையில் ரூ.50 லட்சம் குட்கா சிக்கியது; 2 பேர் கைது

ஊத்துக்கோட்டையில் ரூ.50 லட்சம் குட்கா சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-10 02:00 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள பழைய பெட்ரோல் நிலையம் எதிரில் உள்ள பாலாஜி நகரில் 2 சொகுசு கார்கள் நீண்ட நேரமாக நிற்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி உடனே போலீசாருடன் அங்கு விரைந்து சென்று கார்களில் சோதனை செய்தார்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தார்.

இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இது குறித்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த சித்ராராம் (வயது24), லூக்காராம்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்