அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56¼ லட்சத்துக்கு துவரை ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56¼ லட்சத்துக்கு துவரை ஏலம் போனது.

Update: 2021-02-09 22:30 GMT
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.56¼ லட்சத்துக்கு துவரை ஏலம் போனது. 
துவரை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, அத்தாணி, பர்கூர், ஆப்பக்கூடல், வட்டக்காடு, அம்மாபேட்டை, பட்லூர், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,163 மூட்டைகளில் துவரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
ரூ.56¼ லட்சம்
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 481-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 550-க்கும் விற்பனை ஆனது. 
துவரை மொத்தம் ரூ.56 லட்சத்து 34 ஆயிரத்து 982-க்கு ஏலம் போனது. 
ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், தர்மபுரி, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு போட்டி போட்டு துவரையை ஏலம் எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்