குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
சிவகிரி அருகே குண்டர் சட்டத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள கூடலூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூலித்துரை (வயது 40). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் சிவகிரி போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பரிந்துரை செய்தார். அதை ஏற்று பூலித்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறையில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் சமர்ப்பித்தார்.