சிறுமி கடத்தல்; தொழிலாளி கைது
நெல்லை சுத்தமல்லியில் சிறுமியை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (வயது 25). கூலி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை கடந்த 3-ந் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குலசேகரன்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த இசக்கிமுத்துவையும், அந்த சிறுமியையும் மீட்டனர். சிறுமியை நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்த போலீசார், இசக்கிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.