ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கில் திரிபுராவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கில் திரிபுராவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது.
ஓசூர்,
மராட்டிய மாநிலம் மும்பைக்கு கடந்த அக்டோபர் மாதம் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை சூளகிரி அருகே ஒரு கொள்ளைக்கும்பல் மறித்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றன. இதுதொடர்பாக 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் 29-ந் தேதி திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகித் மற்றும் சஜகான் மைசன் ஆகியோரும் ஓசூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்தநிலையில இந்த வழக்கில் தொடர்புடைய வினோத் தேஜ்வாணி (60) என்பவர் நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் துபாயிலில் இருந்து மும்பை வழியாக திரிபுரா மாநிலத்திற்கு செல்லும் வழியில் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள பரத் தேஜ்வாணியின் தந்தை ஆவார். பின்னர் வினோத் தேஜ்வாணி ஓசூர் கோர்ட்டில் நீதிபரி தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தினர். பின்னர் அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஓசூர் சப்-ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.