பயணிகள் ெரயிலை இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை - மதுரை இடையே பயணிகள் ரெயிலை இயக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-09 20:19 GMT
ராஜபாளையம்,
செங்கோட்டை - மதுரை இடையே பயணிகள் ரெயிலை இயக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டம் 
ராஜபாளையம் ெரயில் நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மதுரை - செங்கோட்டை பயணிகள் ெரயிலை விரைந்து இயக்கவும், அனைத்து ெரயில்களிலும் முன் பதிவில்லாத பெட்டிகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்க வேண்டும். 
விலை ஏற்றம் 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர குழு உறுப்பினர் பிரபு தலைமை தாங்கினார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்