போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்
போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்
திருமங்கலம்
திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த இருசக்கர வாகனத்தை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் பிளாஸ்டிக் பையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது ெதரியவந்தது. ேமலும். அந்த மதுபாட்டில்களில் முறையான லேபிள் இல்லாமல் இருந்தது. அவரை விசாரணை செய்ததில் திருமங்கலம் சோழவந்தான் ரோடு பகுதியை சேர்ந்த பாண்டி(வயது 62) என தெரியவந்தது. இதைதொடர்ந்து பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த 50 போலி மதுபாட்டில்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.