மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-02-09 19:41 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,709 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 4,635 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். 384 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்