புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2021-02-09 19:20 GMT
திருச்சி, பிப்.10-
திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ெரக்ஸ் தொடங்கி வைத்தார். இந்த தேர்பவனி எடத்தெருவில் இருந்து தொடங்கி கேம்ஸ் டவுன், பாலக்கரை ரவுண்டானா வழியாக மீண்டும் எடத்தெருவை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நடத்துகிறார். நாளை (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்