மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.;
அரியலூர்:
அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், அதிக பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க வேண்டும். தனியார் வேலை வாய்ப்பில் 5 சதவீதமும், அரசுத்துறையில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.