பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-02-09 18:12 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விக்னேஷ்குமார் தலைமை தாங்கினார். பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள், திருமண உதவி திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி தப்பாட்ட கலைஞர்கள் பாடல்களை பாடி ஆடினர். மேலும் மயிலாட்டம், காளையாட்டம், பறை இசை போன்ற நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அதிகாரிகள், கலைக்குழுவினர், பொதுமக்கள் இணைந்து பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மகிளா சக்தி கேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்துமதி, மகளிர் நல அலுவலர் வனத்தம்மாள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்