சின்னசேலத்துக்கு ரெயில் மூலம் 51 ஆயிரம் மூட்டை அரிசி வரத்து

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சின்னசேலத்துக்கு ரெயில் மூலம் 51 ஆயிரம் மூட்டை அரிசி வந்தது

Update: 2021-02-09 18:11 GMT
சின்னசேலம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் இருந்து 40 சரக்கு பெட்டிகளில் 2 ஆயிரத்து 500 டன் எடையுள்ள 51 ஆயிரம் மூட்டை புழுங்கல் அரிசியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையிலுள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது. இந்தப் பணி கிடங்கு மேலாளர் பிரபு, இந்திய உணவுக் கழக மேலாளர் ராமலிங்கம், உதவியாளர்கள் பிரகாஷ், செல்லதுரை, ஒப்பந்ததாரர் தியாகராஜன், கிடங்கு துணை மேலாளர் சுந்தர்ராஜன், இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்