பாடாலூரில் ஜவுளிக்கடையில் ரூ.50 ஆயிரம் துணிகள்- பணம் திருட்டு; போலீசார் விசாரணை

பாடாலூரில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் துணிகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-09 18:06 GMT
பாடாலூர்:

திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தில்லைநாதன்(வயது 55). இவர், பாடாலூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர், அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அந்த கடை கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான துணிகள் மற்றும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலை வழக்கம்போல் தில்லைநாதன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தபோது, துணிகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்