முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி;
சிவகாசி,
திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியில் படித்து தற்போது பல்வேறு ஊர்களில் வசித்து வரும் 50 முன்னாள் மாணவர்கள் மற்றும் 30 மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவருமான சபையர் ஞான சேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தொழில் அதிபர் கற்பகா ஜெய்சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது. பின்னர் 30 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் சங்க நிர்வாகிகள் பத்ம சீனிவாசகன், சங்கர், சுரேஷ், ஸ்ரீனிவாசன், ஜெகதீசன் ஆகியோர் செய்திருந்தனர்.