மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மோகனூர் அணி வெற்றி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மோகனூர் அணி வெற்றி
மோகனூர்:
மோகனூரில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நாமக்கல், கரூர், திருச்சி, சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகளும், பெண்களுக்கான போட்டியில் திருச்சி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அணிகளும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அணிகளும் கலந்து கொண்டன.
போட்டியில் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் மோகனூர் மெஜஸ்டிக் அணியும், சென்னை 360 டிகிரி அணியும் மோதியது. இதில் 5-1 என்ற கோல் கணக்கில் மோகனூர் மெஜஸ்டிக் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-வது இடத்தையும், ஜலகண்டாபுரம் ஸ்பார்க் அணி இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் திருச்சி சோழன் அணி முதல் பரிசையும், ஈரோடு ஆர்.எம்.எப்.சி. அணி 2-வது பரிசையும் பெற்றது.
=========
===========